Friday, 23 March 2018
India News

8500 இளம் பெண்களை வசியப்படுத்திய நித்தியானந்தா – திடுக்கிடும் தகவல்கள்..!!

நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி திருவண்ணாமலையில் பிறந்த போது, வானத்தில் அதிசய நட்சத்திரம் தோன்றியதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அப்படியான எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம்தான்,  அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்கு ஜாதகம் கணிக்கப்பட்ட போது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத் திகழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா தினத்தன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார்.

பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாகப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார்அ.ங்கு சேர்ந்த சிறிது காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

‘அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார்.

பின்னர் இமயமலைக்குப் புறப்பட்டார். அங்கு பல கடுமையான தவநிலைக்குப் பிறகு, ‘ஞான அனுபூதி முக்தி’ என்னும் நிலையினை 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று அடைந்ததாக ராஜசேகர் எனும் நித்தியானந்தா தெரிவித்தார்.

அதேவேளை, தியான பீடம் என்ற சேவை நிறுவனத்தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இன்று குறித்த நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் பரந்து விரிந்துள்ளது. இன்றைய நிலையில் நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.தென் இந்தியாவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, கோடீஸ்வர தொழில் அதிபர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமானார்.

தியான பீடத்தில் ஆன்மிகப் பயிற்சியில் சேர விரும்புபவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா கையைத் தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையைத் தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய், பாத பூஜைக்குப் பல்லாயிரம் என வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.

கிட்டதட்ட 2500 கோடிகளை தனது சொந்த கருவூலத்தில் வைத்திருக்கும் நித்தியானந்தா தன்னை துறவி என்று சொல்லிக்கொள்ள தகுதி உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும், நித்தியானந்தா ஆசிரமத்தில் 8500 பெண்கள் உள்ளார்கள். இதில் நிறைய பெண்கள் 16 வயத்துக்கு உட்பட்ட பெண் குழந்தைகள். இந்த சின்ன வயதில் இவ்வளவு ஆபாசம் அதுவும் பொது வெளியில் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் வளர்க்கபடும் விதம் கவனிக்க பட வேண்டியது அவசியம்.

இவர்கள் மேல் கோபப்படுவதை விட அனுதாபம் தான் அதிகம் வருகிறது.அரசு, காவல்துறை, நீதித்துறை, மாதர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அந்த குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய கல்வி, வேண்டிய உளவியல் சிகிச்சை அளித்து நல்வழி படுத்த வேண்டும்.

சர்ச்சைகள் மேல் சர்ச்சை எழுந்தாலும் எதற்கும் அசராத நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில் இன்னமும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

இது அவர் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மடத்தனமான பக்தி மீது அவர் வைத்திருக்கும் ‘அபாரமான நம்பிக்கை’. இந்த அபார மூட நம்பிக்கைதான் இன்னும் இன்னும் புற்றீசல்போல் சாமியார்கள் இங்கு புறப்பட்டுக் கொண்டிருக்க காரணமாயிருக்கிறது.

பிரமானந்தாவுக்குப் பின் ஒரு நித்தியானந்தாவை மக்களின் பக்தி வெறிதான் உருவாக்கியுள்ளது. இவருடன் போலியானந்தா சாமியார்களின் கதை முடியப்போவதும் இல்லை.

இந்த ஆனந்தாக்களால் விவேகானந்தர் போன்ற உண்மை வீரத்துறவிகளின் பெயருக்கு அல்லவா அபகீர்த்தி ஏற்படுகின்றது.