Friday, 15 December 2017
Health

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 அற்புத மருத்துவ பயன்கள்!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் எடுத்துக்கொள்ளும் பழங்களில் வாழைக்குத்தான் முதலிடம். ஆப்பிள், ஆரஞ்சு என எத்தனைப் பழம் வந்தாலும் வாழைக்கு முன் அவை நிற்க முடியாது.

வாழைப்பழங்களில் பல வகை உண்டு, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உண்டு. குறிப்பாக செவ்வாழை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.

மருத்துவம்
உடல் எடை:

செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சீராக்குகிறது. நீண்ட நேரம் பசி உணர்வு வராது. ஒரு பழத்தில் 90 முதல் 100 கலோரிதான் இருக்கிறது. இதனால், உடல் எடைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். வயிறு நிறைந்த உணர்வு இருக்கும்.

சிறுநீரக கல்லைத் தவிர்க்கிறது:

இதில் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கிறது. மேலும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியத்தை உடலில் தக்க வைக்க உதவுகிறது.

மருத்துவம்

ஆண்மை குறைவு:

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு உடலில் பலம் குறைந்து, ஆண்மை குறைபாடு ஏற்படும். அத்தகைய குறைபாடு உள்ள ஆண்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அப்பிரச்னை தீரும்.


கண்பார்வை குறைபாடு:

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். மேலும், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும் என்கிறார்கள்.

தொற்றுநோய் தீரும்:

இதில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மருத்துவம்

சொரி, சிரங்கு நீங்கும்:

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். செவ்வாழையை மசித்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் பொலிவு பெரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

One Comment

Post Comment