Monday, 19 February 2018
Cinema India News

ரஜினி, கமல் யார் முதலமைச்சராக வர யோகம் இருக்கு? பிரபல ஜோதிடர் கணிப்பு!

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் இரண்டு பேரில் தமிழக முதலமைச்சராக யோகம் யாருக்கு என்பது பற்றி பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி கணித்துள்ளார்.

சேலத்தில் உலக தமிழ் ஜோதிடர் மகாஜன சபை தலைவர் ஆதித்ய குருஜி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வருகின்ற 2019க்கு பின் தமிழகத்தில் மிகப்பெரிய அமைதி நிலவும்.



அதுவரைக்கும் அரசியல் உட்பட அனைத்திற்கும் தற்போது குழப்பம் நீடித்து வரும். ரஜினிகாந்த் ஜாதகத்தை பொறுத்தவரை அவர் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால் அதனால் அவரால் முதலமைச்சராக வர வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மக்கள் எதிர்பார்க்காத ஒருவர் தமிழக முதலமைச்சராக வாய்ப்புள்ளது. ஒருவேளை அது நடிகர் கமல்ஹாசனாக கூட இருக்கலாம். காலம்தான் பதில் சொல்லனும் என்று தெரிவித்துள்ளார்