Tuesday, 23 January 2018
India News

ரஜினியின் அரசியல் கட்சி சின்னம் ‘பாபா’ முத்திரை?

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்,



நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் தனிக்கட்சி தொடங்குவேன். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.

உண்மையான, நேர்மையான ஆன்மிக அரசியல் செய்வதே எனது நோக்கம். ஆண்டவனின் அருளும், மக்களின் ஆதரவும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கட்சியின் பெயர், கொடி சின்னம் போன்றவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து பின்னாளில் அறிவிப்பு வெளியாகலாம். அதுவரை ‘பாபா’ முத்திரை ரஜினியின் அறிவிக்கப்படாத சின்னமாக திகழும் என தெரிகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உதய சூரியன் சின்னத்தையும், ஜெயலலிதா இரட்டை இலையையும் கையில் காட்டுவது போன்று, நடிகர் ரஜினிகாந்த் ‘பாபா’ முத்திரையை வெளிப்படையாக காண்பித்துள்ளார்.