Tuesday, 23 January 2018
News World

13 வயது சிறுமியுடன் பாலியல் உறவு? கிடைத்தது ஆயுள் தண்டனை

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நபர் ஒருவர் 13 வயது சிறுமியுடன் உறவு வைத்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஜேர்மனி குடியுரிமை பெற்றவர் Meinrad Kopp(55). இவர் சுவிட்சர்லாந்தில் மருத்துவ துறை ஒன்றில் பணி புரிந்து வருவதாகவும், அங்கிருக்கும் Hergiswil பகுதியில் வசித்து வருவதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில் Meinrad Koppகடந்த ஜுன் மாதம் 16-ஆம் திகதி அமெரிக்காவின் Orlando சர்வதேச விமானநிலையத்தில் திடீரென்று கைது செய்யப்பட்டார்.

இதற்கான காரணத்தை பொலிசார் அப்போது தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த புதன் கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுவிட்சர்லாந்தில் இருந்து, இங்கிருக்கும் அதாவது புளோரிடாவின் Brevard County-யில் இருக்கும் 13 வயது சிறுமியிடம் உறவு வைத்து கொள்வதற்காக சென்றுள்ளர்.

இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவரை பொலிசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 13-வயது சிறுமியிடம் உறவு வைத்துக் கொள்ள விரும்புவது என்பது மரணத்தை விட கொடுமையானது, இதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது, அதற்கான ஆதரங்கள் அனைத்தும் நிரூபிக்கும் வகையில் உள்ளதால், இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று Meinrad Kopp-விற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.