Tuesday, 23 January 2018
Crime India News

சிறுமியை காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்

தமிழகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் அடித்துக் கொலை செய்த கொடூரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.



திண்டுக்கல்லின் செம்மினப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகாமி, இவருக்கு முத்துலட்சுமி என்ற 6 வயது மகள் உள்ளார். சிறுமியை சிவகாமி அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் குப்பம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன், சிறுமி முத்துலட்சுமியை அவரது வீட்டுக்கு, பாட்டி அனுப்பி வைத்துள்ளார்.

சிறுமியை அழைத்துச் சென்ற அவன், அங்கிருக்கும் சுக்காவழி என்ற இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கை மற்றும் கால்களில் தங்கநகைகளை கொல்லையடித்துவிட்டு, அதன் பின் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைக் கண்ட சிலர் உடனடியாக அவனை துரத்திச் சென்று மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதுமட்டுமின்றி வழக்கு ஒன்றில் சிக்கிய அவன், சேலம் சிறுவர் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் வெளியே வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.