Tuesday, 23 January 2018
India News

ரஜினிகாந்த் செயலால் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞன்

அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் ரசிகர் ஒருவர் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை (42). தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் பிறந்தநாள் வந்த நிலையில் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் அறிவிப்பார் என ஏழுமலை ஆர்வத்துடன் காத்திருந்தார்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் பேசவில்லை. இதனால் மன வேதனை அடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்க்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.