Friday, 15 December 2017
Cinema News

திருமணத்திற்கு பின் தனது கணவன் பற்றிய உண்மையை போட்டுடைத்த நமீதா..!!

ஒரு ஆண்டுதான் வீரேந்திர செளத்ரியைத் தெரியும். என்றாலும், ஜென்ம ஜென்மமாய் அவருடன் பழகியது போல் இருக்கிறது என்று நடிகை நமீதா கூறினார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நமீதா சமீபத்தில் தயாரிப்பாளர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Actress-Namitha-Speaks-about-her-Marriage-life

நான் முதன்முதலாக வீரேந்திர செளத்ரியை சந்தித்த போது எங்களிடையே நிறைய ஒற்றுமை இருப்பது தெரியவந்தது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு வந்தபோது, அதில் பங்கேற்கும்படி அவர் தான் ஊக்கம் அளித்தார்.

நான் அவரை 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி சந்தித்தேன். அதன் பிறகு ஒரே ஆண்டில் அவரை திருமணம் செய்து இருக்கிறேன்.

எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இது எல்லாமே கனவு போல் இருக்கிறது. ஒரு ஆண்டுதான் அவரைத் தெரியும். என்றாலும், ஜென்ம ஜென்மமாய் அவருடன் பழகியது போல் இருக்கிறது.

கடற்கரையில் வைத்து அவர் தனது காதலை என்னிடம் சொன்னார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு பதில் சொல்லும் போது மகிழ்ச்சி மேலிட நான் அழுது விட்டேன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த அன்று தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று வீர் என்னிடம் கேட்டார். அவர் கேட்காமல் இருந்திருந்தால் நானே கேட்டிருப்பேன். அவருடன் இருப்பது அருமையான நினைவுகளாக உள்ளது என்று கூறினார்.