Friday, 15 December 2017
India News

தொழில் நஸ்டம்.. கடன்காரனாக மாறிய கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி தேவிகா (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், சங்கரநாராயணன் ரூ.4 லட்சம் கடன் வாங்கி ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.

Women-Sucide-in-near-Palladam

ஆனால் ஓட்டல் சரிவர இயங்காததால் வருமானம் ஏதும் வராமல் சங்கரநாராயணன் விரக்தியில் இருந்து வந்தார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, தேவிகா கணவருடன் சண்டையிட்டு, பொங்கலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றாராம். இதனிடையே, தேவிகா தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.