Friday, 15 December 2017
India News

பெற்ற குழந்தையை சட்டியில் போட்டு வறுத்த தாய்….எதற்காக தெரியுமா?

தனது இரண்டாவது கணவனுடன் இருப்பதற்கு இடையூராக இருந்ததால் முதல் கணவருடன் பிறந்த குழந்தையை கொதிக்கும் சட்டியில் போட்டு வறுத்த தாய்.



தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்துக்கு 4 வயது பெண் குழந்தையுடன் ஒரு தம்பதி சென்றுள்ளனர்.

ஆதரவற்ற நிலையில் சாலையில் அந்தக் குழந்தை இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அந்தக் குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த காப்பக ஊழியர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கொண்டு வந்த லலிதாவுக்கு பிறந்தது தான் அந்தக் குழந்தை என்பது தெரிய வந்தது.

அக்குழந்தை விவாகரத்து செய்த முதல் கணவர் மூலம் பிறந்தது எனவும் மேலும் அக்குழந்தை இரண்டாவது கணவருடன் இருக்க இடைஞ்சலாக இருப்பதால் அதை கொல்ல அந்தப் பெண் முயன்றதும் தெரிய வந்தது.

அதற்காக அந்தக் குழந்தையை கொதிக்கும் சட்டியில் போட்டு வறுத்துள்ளனர். குழந்தையின் தாய் மற்றும் இரண்டாவது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.