Friday, 15 December 2017
Crime India News

தங்கையை காதலித்து கர்ப்பமாக்கி அண்ணன் செய்த கொடுரசெயல்..!!

தர்மபுரி அருகே முறை தவறிய காதலால் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி அவரது உறவினரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தர்மபுரி மாவட்டம் பெரிச்சாகவுண்டம் பட்டியை சேர்ந்த வஜ்ஜிரம் என்பவரது 14 வயது மகள் லட்சுமி அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

வழக்கம் போல் பள்ளி சென்று இவரை கடந்த 23ம் திகதி முதல் காணவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தொடர்ந்து நள்ளிரவு வரை தேடினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெருச்சாகவுண்டம்பட்டி அருகே உள்ள பாலத்தின் அடியில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவி கொலை செய்யப்பட்டு அவரது உடல் அங்கு வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. லெட்சுமியின் உடலை உறவினர்களிடம் இருந்து மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பரிசோதனையில் மாணவியின் வயிற்றில் 8 மாத பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காரிமங்கலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது லெட்சுமி வீட்டிற்கு குப்புசாமி என்பவரின் மகன் பிரதாப் (27) என்பவர் அடிக்கடி சென்று வந்ததுள்ளதை அறிந்த பொலிசார் அவரை தேடிய தருணத்தில் பொலிசில் சரணடைந்துள்ளார்.



அவரிடம் நடத்திய விசாரணையில், கல் உடைக்கும் தொழில் செய்து வந்த பிதாப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லெட்சுமிக்கு சகோதரர் உறவு முறையான பிரதாப் அடிக்கடி லெட்சுமி வீட்டிற்கு சென்று வந்தார்.

சகோதரர் உறவு முறை என்பதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்த முடிவு செய்த பிரதாப், லெட்சுமியிடம் காதலிப்பதாக கூறி, பலமுறை தனிமையில் இருந்துள்ளார்.

இறுதியில் மாணவி தான் கர்ப்பமானதை கூறி திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் என்ன செய்து என்று தெரியாத நிலையில் மாணவியை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிரதாப், அவரை பாலத்திற்கு அழைத்துச் சென்று சிறுது நேரம் பேசிவிட்டு, அவரை நீரில் மூழ்கடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை தரதரவென இழுத்து சென்று அங்குள்ள பாலத்தின் அடியில் வீசி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். மாணவியையும், தன்னையும் பொலிசார் தேடுவதை அறிந்ததும் பயந்து போன பிரதாப் கிருஷ்ணாபுரம் பொலிசில் சரண் அடைந்து நடந்த முழு விவரத்தையும் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்