Monday, 19 February 2018
News World

காதல் லீலைகளால் 70வயது பாட்டி செய்த தொடர்கொலைகள் : அதிர்ச்சி காரணம்..!!

ஜப்பான் நாட்டில் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை, விஷம் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.



ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும், 70 வயதான சிசாக்கோ ககெகி (Chisako Kakehi), என்ற பெண் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது வயதிற்கு இணையான பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து, அவர்களது காப்பீட்டு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை மூன்று நபர்களை இதுபோன்று காதலித்து, அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் மூன்று பேரையும் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார்.

நான்காவது நபரிடம், தமது கைவரிசையை காட்ட நினைத்த போது இவா் சிக்கியுள்ளார். ஆனால் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல், ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.