Thursday, 24 May 2018
பிரதான செய்திகள் மறுபக்கம்

உலகம் அறியாத பிரபாகரனின் இன்னுமொரு மகன் சுவீடனில் : திடுக்கிடும் வீடியோ

இறுதி யுத்தம் நடைபெற்று 10 ஆண்டுகளாகின்ற போதும் இன்னும் அது பற்றிய பல உண்மைகள் சிங்கள பேரினவாத அரசாலும் சர்வதேசத்தாலும் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றமை உலக தமிழர் அறிந்த உண்மை. இறுதி யுத்தம் நடைபெற்று விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் தலைவர் பிரகாரன் உட்பட அனைத்து போராளிகளும் கொல்லப்பட்ட பின்னர் சிங்கள அரசு யுத்தம் முடிவுற்றதாக அறிவித்து வெற்றி விழா கொண்டாடியது.

ஆனால் தமிழர்களுக்கோ அன்றைய நாள் கொத்துக்கொத்தாக அன அழிப்பு நடைபெற்ற கறுப்பு நாளாகவே அமைகிறது. இது இப்படியிருக்க பிரபாகரன் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் மர்மங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவ்வப்போது கிளம்பும் சர்ச்சைகளால் சில நேரங்களில் ஆடிப்போய்விடுகிறது சிங்கள அரசு.

ஆரம்பத்தில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகினாலும் காலம் துலங்க உண்மைகளும் துலங்க ஆரம்பித்தது. உண்மையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற உலகம் அறியா ரகசியம் அடுத்த பதிவில் பார்ப்போம். பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரன் பிள்ளைகள் பற்றிய சில ரகசியங்களும் இங்கே பதிவிட காத்திருக்கிறோம்.

இன்றையை பதிவில் பிரபாகரனின் உலகம் அறியாத ஒரு மகன் இருக்கின்றான் என்கின்ற திடுக்கிடும் தகவல் ஒன்றையே நாம் காண இருக்கிறோம். குறித்த தகவல் யேர்மனில் வசிக்கும் ஈழத்தமிழரான சிவம் கச்சை குமரன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிவம் கச்சை குமரன் பலராலும் அறியப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் மலையகத்தமிழர்கள் பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டவர். மேலும் முஸ்ரீலீம்கள் பற்றியும் அடிக்கடி தனது யூரியுப் சானலில் பல வீடியோக்கள் வெளியிட்டதன் மூலம் அவர்களின் மிகப்பெரிய எதிர்ப்பையும் எதிர்கொண்டவர். இவரது பேச்சுக்கள் அநாகரீகமான முறையில் இருந்தாலும் இவர் சொல்லும் தகவல்கள் மற்றும் விடயங்களில் பல யதார்த்தமான உண்மைகளும் அடங்கி இருப்பது இவரது காணொளிகள் ஆரம்பத்தில் இருந்து பார்த்துவந்த அனைவருக்கும் தெரியும்.

இதனாலோ என்னமோ இவருக்கு என பல ரசிகர் பட்டாமே இருக்கிறது. முகநூல் மற்றும் யூரியும் தளங்களில் தனக்கென தனி நட்பு மற்றும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது கடைசி சர்ச்சைக்குரிய காணொளி பிரபாகரன் பற்றியதாகவே இருக்கும். மேலும் இந்தக்காணொளி வெளியாகி ஓரிரு நாட்களுக்கு பின்னர் இவரது யூரிப் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சில வாரங்களுக்கு பின் அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்ட நிலையில் யூரியுப் கணக்கு இயங்க ஆரம்பித்திருக்கின்றமைiயும் சந்தேகத்தை ஏற்படுத்திய விடயம். எது எப்படியோ இவரால் குறிப்பிடப்பட்ட தகவல்கள் உண்மையாக இருக்கும் எனில் ஈழத்தமிழர்கள் கொஞ்சமேனும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்… முடிவு உங்கள் கையில்… அப்படி காணொளியில் என்னதான் சொல்லப்பட்டது என்ற ரகசியங்களை அறிய கீழே கிளிக் செய்யுங்கள்.

(Visited 156402,542 times, 4025visits today)