Thursday, 24 May 2018
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

மன்னாரில் சிங்கள இராணுவத்தால் புதைக்கபட்ட தமிழர்கள் புதைகுழி அகழ்வு

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகத்தில் இன்று புதன் கிழமை(16) காலை மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியது.

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதன் போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்

(Visited 1564011 times, 1025visits today)