Thursday, 24 May 2018
பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகளால் கொழும்பில் இன்று ஏற்பட்ட பரபரப்பு..!!

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து கேள்வி எழுப்பியமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

வடமாகாண சபை அமைச்சரினால் போர் நிறைவடைந்த தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் போதே ஊடகவியலாளர் சந்திப்பு பரபரப்படைந்துள்ளது.

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித,

“மக்கள் விடுதலை முன்னணியும் தற்போதும் ஒவ்வொரு வருடமும் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகிறது.

போரில் உயிரிழந்தவர்கள் எங்களுக்கு தீவிரவாதியாக தெரிந்தாலும், வடக்கு மக்களுக்கு அவர்களின் பெற்றோர், சகோதரர், சகோதரிகளிகளாகவே தெரிகின்றனர்.

வடக்கில் உயிரிழந்தவர்களும் எங்கள் பிள்ளைகள் தான். அரசாங்க தரப்பில் உயிரிழந்தவர்களும் நாட்டு பிள்ளைகள் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள் என்பது தீவிரவாத அமைப்பாகும் என ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியும் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அது இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் மே 18ஆம் திகதியில் நடத்தப்பட்டு வந்த இராணுவ வெற்றி கொண்டாட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரும் இந்நாட்டு பிள்ளைகளாகும். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ரோஹன விஜயவீர அவர்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் மாற்றத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் சவால் விட்டமையினால் ஊடகவியலாளர் சந்திப்பு சூடான நிலைக்கு சென்றுள்ளது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர்கள் என அமைச்சர் விழித்துக் குறிப்பிட்டமை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 15640167 times, 1025visits today)