Thursday, 24 May 2018
பிரதான செய்திகள்

ஜனாதிபதி யாரென்பதை மஹிந்தவே தீர்மானிப்பார் – பஸில் ராஜபக்ஷ

ஜனாதிபதியாக வருவதற்கு இதுவரை எண்ணவில்லை. அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தீர்மானத்தை மேற்கொள்வாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முடிவை எடுப்பார் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 156402 times, 1025visits today)