Thursday, 24 May 2018
கிழக்கு மாகாணம் பிராந்திய செய்திகள்

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக்கொலை!

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் இருந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மகிழுந்து ஒன்றில் வந்த இருவராலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சூட்டுச் சம்பவத்தில் சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், கொல்லப்பட்டவரின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

(Visited 156401 times, 1025visits today)