Thursday, 24 May 2018
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

மாதகலில் ஐம்பது கிலோ ஆமையைப் பிடித்தவர் கைது..!!

மாத­கல் கடற்­ப­கு­தி­யில் நேற்றைய தினம் ஆமை பிடித்­த குற்­றச் சாட்­டின் பேரில் சந்தேக நபர் ஒரு­வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 50 கிலோ எடை­யு­டைய ஆமை ஒன்றும் மீட்­கப்­பட்­டதாக அவர்கள் தெரிவித்தனர்.

காங்­கே­சன்­துறை சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் உடு­வெல சூரி­ய­வின் தலை­மை­யி­லான சிறுப்­புக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னரே சந்­தே­க­ந­ப­ரைக் கைது செய்­துள்­ள­னர்.

ஆமையானது, வலைக்­குள் மறைத்து கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யில் அது கைப்­பற்­றப்­பட்­டது. கைது செய்­யப்­பட்­ட­ நபா் 47 வய­து­டை­ய­வர் என்­றும், மாத­க­லைச் சேர்ந்தவா் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

கைதாகிய நபர் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இள­வா­லைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளதுடன் இது தொடா்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

(Visited 156401 times, 1025visits today)