Thursday, 24 May 2018
பிரதான செய்திகள்

பல மாகாணங்களில் இன்றும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்றைய தினமும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் தென்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையிட்டுள்ளது.

இதன்படி, வட மாகாணம் உட்பட எட்டு மாகாணங்களில் இந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேற்கு, வட மேற்கு, ஊவா, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், வடக்கில் வவுனியா மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதான செய்திகள்

இது தொடர்பில் மேற்படி திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் காலநிலையில் நாளை முதல் சிறிது மாற்றம் ஏற்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(Visited 156401 times, 1025visits today)