Thursday, 24 May 2018
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் பொலிசாரால் கைது!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய 5 பேரில் மூவரை கைது செய்துள்ளதாகவும் இருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றையதினம்(23-04-2018) அதிகாலை இடம்பெற்றுள்ளது.



ஈச்சங்குளம் தவசியார்குளம் வயல் பகுதியை அண்டிய காட்டு பகுதியில் இன்று அதிகாலை 1மணியளவில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அப்பகுதியை பொலிஸாா் சுற்றி வளைத்தனா்.

இதன்போது மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கைதுசெய்யப்பட்டவா்கள் ஓமந்தை, கிளிநொச்சி, தேவகுளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இருவா் தப்பியோடியுள்ளதாகவும், தப்பி ஓடியவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு, சவல் போன்றவற்றை கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(Visited 156401 times, 1025visits today)