Thursday, 24 May 2018
கிழக்கு மாகாணம் பிராந்திய செய்திகள்

திருகோணமலை உப்புவெளியில் டைனமெட் வெடிபொருளுடன் ஒருவர் கைது!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் டைனமெட் வெடி பொருளுடன் இன்று(20-04-2018) காலை ஒருவர் சல்லி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.புத்திவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இலக்கம் 21 ,முதலாம் வட்டாரம்,சல்லி எனும் முகவரியைச் சேர்ந்த சுவாமி நாதன் அன்பு முருகன் வயது(48) எனவும் தெரியவருகிறது.இவரிடமிருந்து 140×19.5 அளவிலான டைனமட் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலுக்கு கொண்டு சென்று மீன்களை பிடிப்பதற்காக தயார் நிலையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை வைத்திருந்ததன் பேரில் குறித்த நபர் சல்லி கடற்கரையில் வைத்து திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் குறித்த டைனமெட்டுடன் உப்புவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(Visited 156402 times, 1025visits today)