Thursday, 24 May 2018
கிழக்கு மாகாணம் பிராந்திய செய்திகள்

திருகோணமலையில் கோர விபத்து – ஸ்தலத்தில் பெண்ணொருவர் பலி

திருகோணமலையில் இருந்து சென்ற வாகனத்தில் மோதுண்ட பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பேருந்து, முற்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்தில் 68 வயதான கோமரங்கடவெல, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த கபுறுஹாமிகே சீலாவதி என்ற பெண்மணியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று காலை பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸின் பின் பகுதி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் ஓரமாக இருந்து சென்ற பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சாரதி உட்பட இருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 156405 times, 1025visits today)