Friday, 20 April 2018
ADD ADD ADD ADD
பிரதான செய்திகள்

தமிழ் மக்களை அழித்த கட்சிகளுடன் நாம் ஒருபோதும் கூட்டுச்சேரவில்லை

தமிழ் மக்களை அழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவது இயலாத விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மஹிந்தவுடன் இணைவது இயலாது; ஈ.பி.டிபியுடன் இணையவில்லை – செல்வம் அத்துடன், ஈ.பி.டி.பி கட்சியுடன் தாம் இணைந்து செயற்படவில்லை என தெரிவித்த அவர், சுயமாகவே அவர்கள் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியா – வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. பிரதேச சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ச.தணிகாசலம் தெரிவானார்.

செல்வம் அடைக்கலநாதன்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முடிவடைந்த பின்னர் தற்போது சபைகளுக்கான தலைவர், பிரதி தலைவர்களை தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், வவுனியா – வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைக்கான தலைவர், பிரதி தலைவர் தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.

அமர்வில் பங்கேற்றதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில், தலைவர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ச.தணிகாசலமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெ.யெயரூபனும் போட்டியிட்டனர்.

எனினும், இருவரும் 11 வாக்குகளை பெற்ற நிலையில், திருவுள சீட்டு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ச.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொதுஜன பெரமுன சார்பில் க.விக்ரமபால மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா 14 வாக்குகள் பெற்று உப தவிசாளராக தெரிவானார். தவிசாளர் தெரிவின் போது, நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தது.

அதேவேளை, உப தவிசாளர் தெரிவின் போது, தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்தது.

(Visited 1564010 times, 1025visits today)