Tuesday, 23 January 2018
News Viral

வேஷ்டி அணிந்துதான் விமானம் ஓட்டுவேன் என அடம்பிடிக்கும் தமிழன்

இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் பலரையும் நாம் பார்த்திருப்போம். சொந்த ஊருக்கு வரும்போது கூட, வெளிநாட்டுக்காரர் போலவே நடந்து கொள்வார்கள்.

ஆனால் நம்ம ஊரில் படித்து வளர்ந்து, அமெரிக்காவில் பைலட்டாக வேலை பார்க்கும் ஒரு தமிழர் அங்கும் தன்னுடைய தமிழ் பாரம்பரியத்தை என்னுடைய வேலைக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியுடன் போராடி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

வேஷ்டி, விமானம், தமிழன்,பைலட், ஏவுகணை

பைலட் என்றாலே அவர்களுக்கென தனி சீருடை உண்டு. அதை தான் உடுத்த வேண்டும். இந்தியாவிலும் அப்படித்தான்.

அப்படியிருக்க இலங்கை தமிழர் ரவிகரன் ரணேந்திரன் என்பவர் அமெரிக்காவில் பைலட்டாகப் பணிபுரிகிறார். இவர் தன்னுடைய பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்துகொண்டு தான் பணிக்கு வருவேன் என்று கேட்டிருக்கிறார். முதலில் அதற்கு மறுப்பு கிடைத்தது.

என்னுடைய பாரம்பரிய உடையை அணியக்கூடாது என்று நீங்கள் எப்படி மறுக்கலாம் என்று வாதிட்டு போராடி, அதில் வெற்றியும் பெற்று தற்போது வேஷ்டி அணிந்து தான் விமானம் ஓட்டுகிறார்.

அதோடு தமிழில் பேசும்போது வேறு எந்த மொழியையும் கலந்து பேசுவதில்லை. தன்னிடம் தமிழில் உரையாடுபவர்களிடம் அந்நிய மொழி பேச அவர் அனுமதிப்பதும் இல்லை.

இவர் ஒரு பைலட் மட்டுமல்ல. ஒரு ஏவுகணையையும் உருவாக்கியுள்ளார். அந்த ஏவுகணைக்கு அகரன் என தூய தமிழில் பெயர் வைத்துள்ளார்.

Post Comment