Friday, 20 April 2018
ADD ADD ADD ADD
கிழக்கு மாகாணம் பிராந்திய செய்திகள்

வெலிகந்தை காட்டுப்பகுதியில் இருவருக்கு எமனாகிய யானை ..!!

வெலிகந்தை பகுதியில் இன்றையதினம்(13-04-2018) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது……..

கொழும்பு வத்தளையில் இருந்து குடாப்பொக்கனை பிரதேசத்திற்கு செல்லவிருந்த சிறியரக வாகனத்தில் பயணித்தவர்கள் வெலிக்கந்தை பகுதியில் யானை வீதியை விட்டு ஊடறுப்பதைக் கண்டநிலையில், யானை செல்லும் வரை வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும் இந்த நிலையில் ஓட்டமாவடியை நோக்கி வந்த லொறி நிறுத்தியிருந்த வாகனத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணம்

இவ்விபத்துச் சம்பவத்தில் செம்மண்ணோடையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.ஜுனைதீன் (வயது 46) மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக வாகனத்தில் இருந்த வத்தளையைச் சேர்ந்த ஆறுமுகம் கருப்பை ஆகியோா் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த ஆறு பேர் காயங்களுடன் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 156404 times, 1025visits today)