Friday, 20 April 2018
ADD ADD ADD ADD
பிராந்திய செய்திகள் வட மாகாணம்

வவுனியா விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞன்!

வவுனியா குடியிருப்பில் வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(13-04-2018) மதியம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க யாப்பாணத்தை சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எக்காரணத்தால் இறந்தார் என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த விடுதியின் உரிமையாளரிடம் கேட்டபோது தமது விடுதியில் கடந்த பல மாதங்களாக இவ் இளைஞன் மோட்டார் சைக்கிள் மற்றும் மடிக்கனிகளுடன் வந்து தங்கிச்செல்வதாகவும் தான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதனால் வேலைப்பளு உள்ளமையால் தனியான இடத்தினையே கோருவதால் அவ்வாறே தாம் அவருக்கான அறையை ஒதுக்கி கொடுத்துவருவதாவும் தெரிவித்தார்.

அத்துடன் இம் மாதம் முதலாம் திகதி தமது விடுத்திக்கு வருகை தந்தவர் மோட்டார் சைக்கிள் மற்றும் மடிக்கணனிகள் இன்றி வருகை தந்திருந்ததாகவும் கடந்த 13 நாட்களுக்கான கொடுப்பனவை செலுத்தாது தங்கியிருந்த நிலையில் வெளிநாட்டில் இரந்து பணம் வந்தவுடன் தருவதாக கூறியிருந்தார் என்வும் விடுதியின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று(13-04-2018) காலையில் இருந்து உணவுக்கோ வேறு தேவைகளுக்கு அவர் அறையை விட்டு வெளியில் வராதமையினால் விடுதி ஊழியர் சந்தேகம் கொண்டு எனக்கு அறிவித்ததன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், பொலிஸார் வந்து யன்னலை உடைத்து பார்த்தபோது குறித்த நபர் சடலமாக காணப்பட்டதையடுத்து பொலிஸார் கதவை உடைத்து உட்சென்று சோதனை நடத்தியதன் பின்னர் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 156404 times, 1025visits today)