Friday, 20 April 2018
ADD ADD ADD ADD
கிழக்கு மாகாணம் பிராந்திய செய்திகள்

இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட 134 வாழைக்குலைகள் மீட்பு!

 

மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த பெரும் தொகையான வாழைப்பழங்களையே சுகாதாரத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தைக்கு அருகில் வாழைப்பழங்களுக்கு இரசாயண பதார்த்தம் பூசப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கிடைத்தை இரகசிய தகவலொன்றினையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற செங்கலடி பிரதேச சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான செல்வராஜா தவேந்திரராஜா மற்றும் சிவசேகரம் சிவகாந்தன் ஆகியோர் குறித்த இடத்திற்கு சென்று இரசாயனப் பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த 134 வாழைக்குலைக்கள் கைப்பற்றயுள்ளனர்.

வாழைக் காய்களை பழுக்கச் செய்வதற்காக ஆர்.ஜி.எதபோன் என்ற இரசாயணப் பதார்த்தம் வாழைக் குலைகளில் பூசப்பட்டிருந்தன.

இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட 134 வாழைக்குலைகள் மீட்பு!

குறித்த இரசாயன பதார்த்தம் காய்களைப் விரைவாகப் பழுக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டாலும் வாழைக் காய்களில் பூசிப் பயன்படுத்தப்படுவதில்லை.

மூடிய அறையினுள் குறித்த பதார்த்தத்தின் போத்தில் மூடியை திறந்து வைப்பதன் மூலம் காய்கள் விரைவாக பழமாகும். இதைத் தோலில் பூசுவதினால் மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட வாழைக்குலைகள் உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்தனர்.

(Visited 156404 times, 1025visits today)