Thursday, 24 May 2018
பிரதான செய்திகள்

ஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி

தேசிய அரசாங்கம் எவ்வளவு காலம் ஆட்சியில் இருக்குமென்பது எமக்குத் தெரியாது எனினும், இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் சாதாரண பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன்சார்ந்து செயற்பட வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுயிட்ட, அந்தக்கட்சியின், பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கமானது தொழிலாளர் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்பதை இம்முறை மே தின கூட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி

இங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், “ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரும், கடந்த காலங்களில் தொழிலாளர்களை கொலை செய்ததோடு, அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.

ஆகவே மே தினங்களை கொண்டாடுவதற்கு அந்தக் கட்சிகளுக்கு எவ்வித தகுதியும் இல்லை. மே தினத்திற்கு சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை பிரதிநிதித்துப்படுத்தும் சிவப்பு கொடியை அந்தக் கட்சிகள் புறக்கணித்துவிட்டு, தங்களது கட்சிக் கொடிகளை பறக்கவிட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” எனக் குறிப்பிட்டார்.

(Visited 156408 times, 1025visits today)