Friday, 20 April 2018
ADD ADD ADD ADD
பிரதான செய்திகள்

சிங்கள மயமாகும் முல்லைத்தீவு : விவசாய அமைச்சர் க.சிவனேசன்

வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று (10) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட மக்களது வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய களப்பயணம் ஒன்றை மேற்கொண்டதோடு மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் வெலி ஓயா மற்றும் கொக்கிளாய் பிரதேசங்களுக்கு சென்று அங்கு தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் கடல் பிரதேசத்தில் அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடி விடயங்கள் போன்றவற்றை இன்று நேரில் அவதானிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபையின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளார்கள். தமிழர்களின் சொந்த வாழ் இடங்கள் மற்றும் மணலாற்று பகுதியில் தமிழ்மக்களின் தாய்நிலபிரதேசங்கள் பல இன்று பேரினவாத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதில் சில குளங்கள்கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளங்கள் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்துள்ளார்கள். இந்த விடயங்கள் தொடர்பில் மாவட்ட செயலரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம். இங்கு அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து வரும் மாகாணசபையின் அமர்வுகளில் கதைக்கவுள்ளோம்

இதற்காக முதலில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் நாங்கள் இந்த பிரச்சனைகளை கதைக்கவுள்ளோம். அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளோம். இதன் பின்னர் ஒரு பொதுவான அறிக்கையினை மாகாணசபைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம், என்றும் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 156405 times, 1025visits today)