Friday, 15 December 2017
Crime News

பசுமாட்டுடன் அம்மணமாக பாலியல் உறவு வைத்த காம கொடூரர்கள்

ராசிபுரம் அருகே பசுமாட்டை காமக் கொடூரர்கள் இருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்து வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் பசுமாடு பால் சொசைட்டி அருகே கட்டப்பட்டிருந்தது.

இரவு பயங்கர குடிபோதையில் வந்த இருவர் பசுமாட்டை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பசுமாடு கதறும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட இருவரை துரத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் தப்பி விட்டதாகவும், அதே பகுதியை சேர்ந்த பொன்நாச்சி என்பவரின் மகன் ரத்தினம்(55) என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து பசுமாட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ரத்தினம் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

பசு மாட்டின் உரிமையாளர் கூறுகையில் கடந்த 20 நாட்களாகவே இந்த கேவலமான சம்பவம் நடந்து வருகிறது.

மாடு கட்டப்பட்டுள்ள இடம் அடிக்கடி மாற்றி மாற்றி கட்டப்பட்டதாலும், இரத்தம் சிந்தி கிடப்பதை பார்த்த பசு உரிமையாளர் அந்த பகுதியைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.

இரவு திடீரென மாட்டின் அலறல் கேட்கவுமே மாட்டு கொட்டகை சென்று பார்த்த போது இருவர் பிறந்த மேனியோடு பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தனர்.

இதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவன் தப்பியோடவே, மற்றொருவன் பிடிபட்டான். இந்த மோசமான செயலை அப்படியே விட்டுவிட்டால் இந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் குடும்பப் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் என்றார்.

Post Comment