Tuesday, 23 January 2018
Crime News

கோவில் திருவிழா நேரத்தில் மூதாட்டிக்கு நடந்த கொடுரசம்பவம்.!!!

கம்பத்தில் நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராஜகோபால். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி துளசிமணி (76). தனியாக வசித்து வருகிறார். இவர்களது 4 மகள்களுக்கும், திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பகவதியம்மன் கோவியிலில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

இதை பார்க்க அப்பகுதி பெண்கள் துளசிமணியின் வீட்டு வாயிலில் நின்று இன்று காலை வேடிக்கை பார்த்துள்ளனர். அப்படி மஞ்சள் நீராட்டு விழா பார்க்க நின்ற பெண்கள், துளசிமணியை கூப்பிடுவதற்காக கதவை தட்டி உள்ளனர்.

அப்பொழுது கதவு திறந்திருந்தது. உள்ளே பார்த்த போது பூஜை அறையில் துளசிமணி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதை பார்த்த பெண்கள் அலறவே, கூட்டம் கூடியது.

இந்நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நகைக்காகவே இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comment