Friday, 23 March 2018
Article History News Viral

யாழில் பிரபலமாகும் “செக்ஸ் வீடியோ” இதோ நீங்களும் பாருங்கள்..!!

இதை வாசிக்கவும் இவற்றில் உள்ள வீடியோக்களை பார்க்கவும் குறைந்தது 1GB Data வும் இரண்டு மணித்தியாலமும் தேவை. ஆகவே அவசரப்பட்டு வாசிக்காமல் பார்க்காமல் இன்னொரு உலகம் இந்த பூமியில் உள்ளது என்பதைக் கண்டு களியுங்கள்.

jaffna-sex

மருத்துவ வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் நமக்குத் தேவையா,??? நாமும் இப்படியே வாழ்ந்து செத்துப் போவமா?? என்று யோசிப்பவர்கள் எனக்கு உள்பெட்டியில் தகவலைத் தாருங்கள். எல்லோரும் சேர்ந்து அந்தமானுக்குப் போய் சேருவம்…. உந்த சுமந்திரன், சம்பந்தன், முதலமைச்சர், சைக்கிள், வீடு, பேரவை என்று எந்த நினைப்பும் இல்லாமல் சுதந்திரமாக வாழலாம்.

Thanks Thanapalasingam Vasantharuban Facebook


போன பெப்ரவரி 29ம் திகதி விடிய கண் முழிச்சுப் பாக்கிறன். உடம்பில ஒரு துண்டு துணி இல்லாமல் கட்டாந்தரையில படுத்திருந்தேன்…. எழும்பிப் பார்த்தால் என்னைச் சுற்றி நிர்வாணமா கறுப்புத் தங்கம் போல மின்னுற நிறத்தில பெட்டைகளும் பெடியலுகளுமாக ஓடித்திரிந்தார்கள்.
நான் எங்க இப்ப இருக்கிறன் என்டு திகைச்சுப்போய் பார்த்தேன்… என்னால என்னையே நம்பமுடியல…..

மலைகளோடு சேர்ந்த அடர்ந்த காடு. மலை அடிவாரத்தில ஆழ் கடல். மெதுவா எழும்பி நடக்கத் தொடங்கினேன்…. நான் நிற்பதையே கருத்தில எடுக்காமல் நிர்வாணமான ஆண்களும் பெண்களுமாக ஒரு குரங்கைத் துரத்தித் துரத்தி அம்பு எய்து வேட்டையாடி பச்சையாகவே அதன் இறைச்சியை சாப்பிட்டார்கள்.

அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு காட்டுக்குள்ள நுழைந்தால் அங்கே நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. 12 வயது மதிக்கத்தக்க சிறுமி நிறை மாத கர்ப்பிணியாக நிர்வாணமாக நின்றிருந்தாள். அவள் குழந்தை பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது. பன்னீர்குடம் உடைந்து குழந்தையின் தலை அவளது பிறப்புறுப்பால் வெளியே வரத்தொடங்கியது. அப்படியே நின்றபடி தனது கையை குழந்தையின் தலையில் மெதுவாக வைத்து வெளியே இழுத்தெடுத்தாள் அதே கர்ப்பிணிச் சிறுமி. குழந்தை வெளியே வந்தவுடன் தொப்பிள் கொடியை இழுத்து கூர்மையான கல் ஒன்றால் அறுத்துவிட்டு குழந்தையைச் சுற்றியிருந்த வழுவழுப்பான திரவத்தை துடைத்துவிட்டு தனது முலையால் பால் கொடுக்கத் தொடங்கினாள்.

”இவருக்கு சுகர் இருக்குதோ?” , ”ஓம் டொக்டர் சுகர் இருக்குது” – இப்படி எனது மனைவியின் குரலும் டொக்டர் ஒருவரின் குரலும் எங்கிருந்தோ கேட்டது.

மனைவியின் குரலையும் நான் பொருட்படுத்தாது அந்த சிறுமி குழந்தை பெற்றதை பார்த்து அதிர்ச்சிடைந்த பின்னர் இன்னும் காட்டுக்குள் நுழைந்து சென்றேன்… அங்கு 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி 50 வயது மதிக்கத்தக்க ஒரு மனுசனை தாக்கிக் கொண்டிருந்தாள். இவள் ஏன் தாக்குறாள் என அவதானித்த போது அதிர்ச்சியாக இருந்தது.. அவள் என்ன செய்கின்றாள் என அறிவதற்காக மரத்தின் பின்னால் பதுங்கிய போது திடீரென எனது முகத்தில் குளிர்ந்த நீர் வந்து விழுந்தது.திடுக்கிட்டுப் பார்த்தேன். மனைவி எனக்கு முன்னால் அழுதபடி நின்றாள். அவளுக்குப் பக்கத்தில் வைத்திய நிபுணர் ஒருவர் நின்றிருந்தார்.

”அவர் முழிச்சிட்டார். இனி வெளியால போங்கோ. நான் இவரை செக் பண்ண வேணும்” என்டு சொல்லி மனிசியை அனுப்பிவிட்டு டொக்டர் எனக்குப் பக்கத்தில வந்தார்.

நான் படுக்கையை விட்டு எழும்பினேன். பார்த்தால் ஏதோ ஒரு ஆசுப்பத்திரியில் இருப்பதாக விளங்கியது. ஆனால் யாழ் போதனா வைத்தியசாலை அல்ல. ஒரு தனியார் மருத்துவமனையாத்தான் இருக்கும். தனி அறை. டொக்டரிடமே கேட்டன் ”ஏன் டொக்டர் ஆசுப்பத்திரியில என்னை விட்டிருக்கினம். என்ன நடந்தது? இது எந்த ஆசுப்பத்திரி” என்று நான் கேட்டன்….

அவர் சொன்னார் ”உமக்கு மனிசி தலையில சாதுவா அடிச்சதாம். நீர் மயங்கிட்டீராம். அதுதான் கொண்டு இங்க கொண்டு வந்தவா. இது ’சவுத்தோன் கொஸ்பிற்றல்’ என்டும் சொன்னார் . ’அடி பாவி…. அந்த ஆசுப்பத்திரியில குடுக்கிற மருந்தைப் பற்றி தெரிஞ்சுமா என்னை இஞ்ச கொண்டந்தனி’…. அரசாங்க ’இன்சூரன்ஸ்’ ’அக்றகாரா’ கூட இவங்கட கட்டணத்துக்கு கட்டுப்படாதே என்டு என்ர மனிசியை மனசுக்குள்ள திட்டிக் கொண்டு டொக்டரைப் பார்த்தேன்….

அவர் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தார்.

”என்ன டொக்டர் பாக்கிறீஞ்கள்” என்டு கேட்டன்.

”என்ன வேலை செய்தனீர்” என்டு கேட்டார்.

நான் ஒரு தீவுல வாழுற மனுசங்கள் பற்றி யூரியுப்ல பார்த்துக் கொண்டிருக்க பின்னால வந்து நின்டு மனிசி அந்த வீடியோக்களை பார்த்துப் போட்டு எனக்கு உந்த கொம்பியூட்டரில இருந்து செக்ஸ் வீடியோவோ இவ்வளவு நாளும் பாத்துக் கொண்டு இருக்கிறனீர் என்டு தலையில அடிச்சது அப்பத்தான் எனக்கு நினைவு வந்திச்சு.

அவற்றை எல்லாம் நான் கருத்தில் எடுக்காமல் டொக்டர் நான் ஒரு தீவில வாழுற மனுசரைப் பற்றி இன்ரநெற்றில பார்த்தனான். உங்களுக்கும் அதை காட்டுறன் என்டு சொல்லி என்ர ஐபோனில அவருக்கு அந்த வீடியோக்களைக் காட்டினேன். அவரும் ஆர்வமா பார்த்தார். நீங்களும் பாருங்கோ…

வீடியோகள் கீழே இருக்குது…. இந்த வீடியோக்கள் அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் சிறு தீவான செண்டினல் தீவில் வாழும் நிர்வாண காட்டுவாசிகள் பற்றியதும் அந்தமான் தீவில் யாறாவா எனும் இடத்தில் வாழும் காட்டுவாசிகள் பற்றியதுமான வீடியோவாகும். பார்த்து மகிழுங்கள்.

மற்றும் அந்தமான் தீவுகளில் காணப்படும் மக்களின் வாழ்க்கை முறைகளும் அவர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோக்களும் கீழே உள்ள இணைப்பில் காட்டப்பட்டுள்ளன.

1st Video இங்கே அழுத்தவும்

2nd Video இங்கே அழுத்தவும்

டொக்டர் பார்த்து முடிந்த பின்னர் சில கேள்விகள் அவரிடம் கேட்டேன்…

அந்த காட்டுவாசிகள் வாழும் இடத்தில் மகப்பேற்று நிபுனர் இல்லை. ஆனால், அறுவைச்சிகிச்சை இல்லாது குழந்தைப்பேறு நடக்கின்றது.

அங்கு நீரழிவு பரிசோதனை இல்லை, இரத்த அழுத்தப்பரிசோதனை இல்லை. ஏன் டொக்டர்மாரே இல்லை…. சனம் வாழவில்லையா?

எல்லாரும் கண்டகண்டபடி தங்களுக்கு விருப்பமானவர்களுடன் தாங்கள் விரும்பின நேரத்தில் உடலுறவு கொள்ளுறாங்கள். அவர்களுக்கு ஏன் எயிட்ஸ் வரவில்லை?இன்னுமொன்று பக்கத்து வீட்டு கோழிச் சேவல் செய்யாத கற்பழிப்பு இல்லை. அப்படி என்றால் அந்த கோழிச் சேவலுக்கும் எயிட்ஸ் வந்திருக்க வேணும். ஏன் வரவில்லை.

அங்கு பொலிசாரும் இல்ல. நீதிமன்றமும் இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை. பணம் இல்லை…. ஒன்றும் இல்லை. ஆனால் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள்…..

” இவ்வளவுக்கு உங்கள் பதில் என்ன டொக்டர். நீங்கள் ஏன் டொக்டருக்கு படிச்சனீங்கள். காசு உழைக்கவும் டொக்டர் என்டால் மதிப்பா இருக்கலாம் என்டும்தானே” இப்புடி டொக்டரைக் கேட்டுப் போட்டன்.

டொக்டர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை. பேசாமல் ஏதோ தன்ர பாட்டில எழுதிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தால் வெளியா போயிட்டார். அவர் போய் கொஞ்ச நேரத்தால மனிசி உள்ளுக்கு ஓடிவந்தாள். ஐயோ நீங்கள் செக்ஸ் படம் பாத்தது என்டு சும்மா மண்டையில சாதுவாத்தான் அடிச்சனான்… ஆனால் இப்புடி விசராக்கும் என்டு எனக்கு சத்தியமாத் தெரியாது என்டு அழுது கொண்டு என்னைப் பார்த்தாள்.

பின்னால இரண்டு பேர் வந்தாங்கள். அவங்கள் அங்கொடை வைத்தியசாலை ஊழியர்களாம். நான் திமிரத் திமிர என்னைத் துாக்கி கொண்டு வெளியே போனாங்கள்…..

எனக்கு விளங்கிட்டுது. டொக்டர் கோவத்தில எனக்கு விசர்ப்பட்டம் கட்டி அங்கொடைக்கு அனுப்புறார் என்டு.

அந்த ஆசுப்பத்திரியில யாழ்ப்பாணச் செய்தி ரீவியில ஓடிக் கொண்டிருந்திச்சு. அதுல தமிழ் தேசிய பேரவையின் கூட்டம் யாழ் பொதுநுாலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடக்கின்றது என்டு செய்தி சொல்லிக் கொண்டிருந்தாங்கள். அந்த ரீவியை உத்துப் பார்த்தன். என்னை விசராக்கிய டொக்டரும் அந்த பேரவையில உறுப்பினரா இருக்கிறார்.

எனக்கு இப்ப சந்தோசம். இன்னும் யாழ்ப்பாணத்தில இருக்கிற கனக்கப் பேர் கொஞ்சக்காலத்தால என்னோட அங்க வந்திடுவாங்கள் என்டு உரத்துச் சிரிச்சுக் கொண்டு அம்புலன்சில ஏறினன்.

ஐயோ இப்புடி சிரிக்கிறாரே… நல்லா முத்திப் போச்சுதோ என்டு அங்கால மனிசி குளறிக்கொண்டிருந்தாள்….

குறிப்பு –

சிரியா யுத்தத்தில் தமிழ் விமானம் ஓட்டியின் வீரம், தமிழ்த்தேசியப் பேரவையில் குழம்பம், தமிழரசுகட்சியில் அனந்தி வெளியேற்றம், மகிந்த அணியின் வெற்றி, பிரதமர் மாறப் போறார் என்று பேஸ்புக்கில இருந்து எல்லாத்திலையும் பார்த்து பார்த்து கண் புளிச்சுப் போச்சுது. உடம்பில குண்டைக் கட்டிக் கொண்டு ஆரும் போடுற அலங்கோலச் செய்திகளை பேஸ்புக்கில கண்ணை மூடிக் கொண்டு பகிர்கின்ற ஆராவது ஒருத்தனிலையாவது பாய்ஞ்சு வெடிக்கப்பண்ணி செத்துப் போகனும் போல இருந்திச்சு……

ஆனாலும் திடீரென உதித்த ஒரு யோசனை சரியாய்பட்டது. அந்த யோசனைப் படி நடப்பம் என்று இதை எழுதினனான்…அந்தமான் தீவுக் கூட்டங்கள் சிலவற்றி வாழும் மக்கள் பற்றிய குறிப்பு இது. (இந்த தகவல்கள் மட்டும் ஆனந்தவிகடனில் காணப்பட்டு என்னால் பிரதி செய்யப்பட்டவை. )

அந்தமான் பக்கத்தில் இருக்கிற குட்டித் தீவு செண்டினல். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் இருக்கிற மனிதர்கள் பற்றிய குறிப்புகளைப் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் வலை வீசித் தேடி கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை அவர்கள் பற்றிய ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த உலகமும். அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்புகளும்தான். தப்பிப் பிழைத்தவர்கள் வெளி உலகத்துக்குச் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் திகில் ரகம். செண்டினல் தீவு மக்கள் இந்த உலகத்துக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்.”

சம்பவம் ஒன்று:

ஆவணப்படக் குழு ஒன்று படப்பிடிப்புக்காக செண்டினல் தீவுக்குப் படகில் செல்கிறது. போகும் பொழுது சில பரிசுப் பொருள்களைக் குழு கொண்டு செல்கிறது. தீவில் கரை இறங்கிய இரண்டொரு வினாடிகளில் நான்கு புறமிருந்து ஈட்டிகளும் அம்புகளும் வந்து விழுகின்றன. பதறிப் போன மொத்த குழுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். திரும்பி கரையைப் பார்க்கும்போது ஒரு அம்பு படகில் வந்து குத்துகிறது. திரும்பி வரக் கூடாது என்பதற்கு எச்சரிக்கைதான் அந்த அம்பு. சம்பவம் நடந்த ஆண்டு 1974

சம்பவம் இரண்டு:

கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப்பாறைகளில் மோதிக் கரை தட்டி நிற்கிறது. கப்பல் கேப்டன் உதவிக் கேட்டு காத்திருக்கிறார். இரண்டாவது நாள் அதிகாலையில் கரையை நோக்கி சிலர் வருகிறார்கள். உற்றுக் கவனித்ததில் வந்தவர்கள் எல்லோர் கையிலும் வில் அம்பு ஈட்டி என வைத்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எல்லோரும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த கேப்டன் பதறிப்போய் வயர்லெஸ்ஸில் கடற்படைக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரில் வந்து எல்லோரையும் மீட்டு வந்திருக்கிறது இந்திய கடற்படை. சம்பவம் நடந்த ஆண்டு 1981. கப்பலின் பெயர் ப்ரைம்ரோஸ். கூகுள் மேப்பில் இப்போதும் இந்த சிதிலமடைந்த கப்பலின் உருவம் தென்படுகிறது.

2006 ஜனவரி மாதம் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தீவின் கரையில் ஒதுங்குகிறார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் இறந்துபோன உடல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. உடலெங்கும் ஈட்டி குத்திய தடயங்களுடன் கிடந்திருக்கின்றன. உடல்களை மீட்கச் சென்ற கடலோர காவல்படையினரை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் வர உடல்களை மீட்காமலே திரும்பி இருக்கிறது கடற்படை.

60000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழங்குடியினர் வசிக்கிற தீவு செண்டினல். வங்காள விரிகுடா கடலில் இருக்கிறது. உலகம் இத்தீவில் இருக்கிற மக்களை செண்டினலீஸ் என அழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பசுமை சூழ்ந்த காடுகள் அழகிய மணல் பரப்புகளைக் கொண்ட தீவின் மொத்த பரப்பளவு 72 சதுர கிலோ மீட்டர்கள். தீவில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கம் என்ன என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இதுவரை இல்லை. மரங்களும் செடிகளும் சூழ்ந்திருப்பதால் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. விலங்குகள், மீன்களை வேட்டையாடுவதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகின் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிற தீவில் 50ல் இருந்து 250 வரை மக்கள் தொகை இருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்தத் தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்திருக்கின்றன. ஆழிப்பேரலையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் இருந்திருக்கிறது. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்த தீவு மக்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுனாமிக்கு பிறகான நாள்களில் செஞ்சிலுவைச் சங்கம் சென்டினல் தீவு மக்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை விமானத்தில் இருந்தபடியே போட்டிருக்கிறது. ஆனால், தீவு மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஈட்டிகளையும் அம்புகளையும் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தை ஈட்டி பதம் பார்க்க, போன வழியிலேயே திரும்பி இருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

இந்தத் தீவுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் என்கிறவரின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்கிறது. பல ஆண்டுகளாக அவர்களைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டு பயணித்திருக்கிறார். பல தடைகளுக்குப் பிறகு ஒரு முறை அம்மக்களை சந்தித்திருக்கிறார்கள். குழுவினர் கொடுத்த தேங்காய்களைப் பழங்குடியினர் பெற்றுக்கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் குழுவினரை திரும்பிப் போகச் சொல்லி சைகை செய்திருக்கிறார்கள். குழு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறது.அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது. பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது. தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது இந்தியக் கடற்படை. அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.