Friday, 23 March 2018
News Viral World

சிரியாவுக்கு தமிழன் விமானம் ஓட்டிய செய்தி பொய் : உறுதிப்படுத்தப்பட்ட தகவல்..!!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆயிரக்கணக்கான சிரிய நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென ஊர்ஜிதமாகியுள்ளது.

சிரியாவில் இடம்பெற்று வரும் பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு கனேடிய பிரதமர், சிரிய பிரஜைகளுக்கு கனடாவில் புகலிடம் வழங்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


முதற்கட்டமாக ஆயிரக்கணக்கானோரை கனடாவுக்கு அழைத்து வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கனேடிய பிரதமரை பாராட்டியும், வாழ்த்தியும் சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், இந்தத் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ஷேயார் செய்யவும்.

இது தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் கனேடிய அரசாங்கம் வெளியிடவில்லை.

குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தமிழ் நியுஸ் இணையத்தளம், கனடிய எல்லை பாதுகாப்பு முகவர் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது மேற்குறிப்பிட்ட செய்தி முற்று முழுதான வதந்தி என்றும், கனடா பிரதமரோ அல்லது பிரதமர் அலுவலகமோ மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக தற்போது எந்தவித கரிசனையும் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தகவல் தருகையில், கனடா அரசாங்கமானது எந்தவொரு சிரிய பிரஜையைும் தாமாக முன்வந்து கனடாவிற்குள் உள்ளீர்க்காது என்பதையும் தௌிவாக தெரிவித்தார்கள்.

 

​சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக வாசகர்கள் மேலும் அறிந்து கொள்ள குறிப்பிட்ட இணையத்தளங்களுக்கு சென்றால் தௌிவடைய முடியும்.

Canada Border Services Agency இணையத்தளம்
Global News இணையத்தளம்
அத்துடன் கனடாவின் எந்தவொரு பிரபல ஊடகமோ அல்லது, சர்வதேச ஊடகங்களான சி.என்.என், பி.பி.சி, கார்டியன் அல்லது ரொய்ட்டர்ஸ் என்பன கூட இது தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வௌியிடவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால், சமூக ஊடகங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் இது தொடர்பில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

எனவே இது வெறும் கட்டுக்கதை என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ஷேயார் செய்யவும்.

—————

கனேடிய பிரதமரும், விமானத்தை ஓட்டிய இலங்கைத் தமிழனும்

ட்ரூடோவின், நல்லெண்ணம், பரந்த மனது என பேஸ்புக் தமிழர்கள் புராணம் பாடிக்கொண்டிருக்கும் போது, வெறொரு சுவாரஸ்ய தகவலும் பரவத்தொடங்கியது.

ஆம், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழரொருவர் சிரியாவிக்கு விமானமொன்றை ஓட்டிச்சென்று, சிரிய பயணிகள் பலரை மீட்டு வந்ததாக தகவலொன்று வெளியானது.

இத்தகவல் வெளியாகி சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அதனைப் பகிரத்தொடங்கினர். அச்செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என சற்றும் ஆராயாத தமிழர்கள் இதனைப் பகிரத்தொடங்கினர்.

ஒரு படி மேலே சென்ற இணையத்தளங்கள் பல அதனை செய்தியாகவே பரப்பின.

மேலும் இந்த செய்தி தொடர்பாக தெரியவருவது, நபரொருவர் தனது நண்பர் தொடர்பாக கேலியாக இட்ட தகவலே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது என்ற உண்மையும் தெரியவந்தது.

மேலும் விமானத்தை ஓட்டியதாக கூறப்பட்ட தமிழரும் , இது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கினூடாக விளக்கமளித்துள்ளார்.

பேஸ்புக்கும் – ‘FAKE NEWS’
பேஸ்புக் உட்பட பல இணைய நிறுவனங்கள், ‘பேக் நிவ்ஸ்’ எனப்படும் போலிச் செய்திகளை கையாளும் விதம் தொடர்பாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.

பேஸ்புக்கின் ஊடாக பரவும் போலியான தகவல்கள், நிந்தனைகள் மற்றும் அரசியல்சார் பிரச்சாரங்கள் அதிகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

போலிச்செய்திகளை முறையாக கையாள்வதற்கு பேஸ்புக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் அது எவ்வளவு தூரத்துக்கு வெற்றியளித்துள்ளது என்பது சந்தேகம்.


இந்நிலையில், கனேடிய பிரதமர் மற்றும் இலங்கை தமிழர் தொடர்பான செய்தி இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. சற்றும் ஆராயாமல் பலர் பகிர்ந்த இத்தகவலானது போலியானதென தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

சிலவேளை இத்தகவல் பாரதூரமான ஒன்றாக இருந்திருக்கும்பட்சத்தில் அது ஏற்படுத்தியிருக்கக்கூடிய சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கக்கூடிய பாதிப்புகள் மிக அதிகம்.

எனவே இனிமேலும் இத்தகைய உணர்ச்சிபூர்வமான தகவல்களை பகிரும்போது அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது.

* இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ஷேயார் செய்யவும்.

NewsFrom :- http://tamilnews.com