Friday, 23 March 2018
Crime News Srilanka Thillu Mullu

ஏறாவூரில் வாகனத்தை விசித்திரமான முறையில் கொள்ளையடித்த திருடர்கள்

ஏறாவூரில் வழிப்போக்கர்கள் வாகனத்தை விசித்திரமான முறையில் கொள்ளையடித்த திருடர்கள் ஒரு கிழமையின் பின் கைது! ஏறாவூரில் உணவிற்காக நிறுத்தப்படும் வேறு தேவைகளுக்கு இடைத்தங்கும் வாகனங்களை பொருட்களை நூதனமாக திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

CCTV பதிவுமூலம் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டட ஐந்து பேர் ஏறாவூர் பொலிசாரால் கைது.

சென்ற 14-02-2018 அன்று இரவு சம்மாந்துறையிலிருந்து கொழும்பு செல்வதற்காக கறுப்பு நிற KDH ரக WP :PC :3112. இலக்க வேனில் வெளியாகிய குடும்பமொன்று, இரவு 11.40 மணிக்கு ஏறாவூர், ஓடாவியார் வீதியை சேர்ந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வந்து தேனீர் குடித்துச் செல்லும் நேரம் வரை ( 45 நிமிடம்) தங்கியிருந்துவிட்டு, பின்னர் கொழும்பு நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளனர்.கொழும்பு சென்றதும் வேனில் வைக்கப்பட்ட பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பாரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வேனுக்குள் வைத்திருந்த 26.5 பவுன் நகையும், நான்கு லட்சம் ரூபா பணமும் காணாமல் போயிருப்பதை அறிந்து, ஏறாவூரை சேர்ந்த சகோதரரின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “உங்க வீட்டில் எங்களது பார்சல் ஏதும் இருக்கிறதா “என்று பாருங்கள் என கேட்டுள்ளனர்.

ஏறாவூரை சேர்ந்த சகோதரர் தேடிப்பார்த்துவிட்டு இங்கு அவ்வாறான எந்த பார்சலும் இல்லையென்று சொன்னதோடு,
அவ்வாறு எனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து வேனிலிருந்த பார்சல் காணாமல் போயிருந்தால், அருகில் CCTV இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் மீண்டும் சம்மாந்துறை சகோதரர் அழைப்பை ஏற்படுத்தி, சிலவேளை சம்மாந்துறை வீட்டில் வைத்திருக்கிறோமோ தெரியாது? அங்கு சென்று பார்த்துவிட்டு அறிவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

கொழும்பில் ஒரு வார வேலைகள் முடிந்து மீண்டும் சம்மாந்துறை சென்றபோதுதான், பொருட்கள் களவுதான் போயிருக்கிறது என்பதை அறிந்துள்ளனர்.

உடனடியாக ஏறாவூரை நோக்கி வந்து குறித்த CCTV யை பரிசோதித்த போது, அன்றிரவே (14/02) இருவர் வேனுக்குள் நுழைந்து பொருட்களை களவாடிச் செல்வதை பதிவேற்றம் செய்து, ஏறாவூர் பொலிஸில் (25/02) முறைப்பாடும் செய்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திரு சிந்தக்க பீரிஸ் அவர்கள், , குறித்த CCTV யில் காணப்படும் நபர்களை அடையாளம் காண உதவுங்கள் என்றார் ஊர் பிரமுகர்களிடம்.ஆனாலும், மிகத்துரிதமாக தனது புலனாய்வை புலப்படுத்திய சாஜன் பதுர்தீன் அவர்கள், குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி, பொலிஸ் உத்தியோகத்தர் மிஸ்பா(pc :76330) , குமார (Pc :34208), விஜேதுங்க (Pc :79135) , கணகேஸ்வரன் (Pc :54879)ஆகியோர் உதவியுடன் குறித்த குற்றவாளிகளை கைதுசெய்து , களவாடப்பட்ட நகைககளில் 22 பவுன்களும், களவாடப்பட்ட பணத்தில் 143000/= ரூபாவினையும் அவர்கள் மூலமாக பெற்றிருக்கின்றனர்.

சற்றுமுன் மிகுதி நகைகள் 4 பவுன் எடுத்திருப்பதாகவும், பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே சார்ஜன் பதுர்தீன் தெரிவித்தார்.

வேனின் கதவுகள் தன்னியக்கமாக மூடியிருந்தாலும், பின் பக்க சைட் கிளாஸ் சிறிது திறந்திருந்ததால் அதனூடாக இஸ்மத் என்பவன் உள் நுழைந்து நகைககள், பணம் இருந்த பேக்கை எடுத்து வந்ததோடு, ஏனைய நான்குபேரும் (நிப்ராஸ், றிஸ்கான், இஸாம். இனாமுல் ஹக்) காவலுக்கு நின்றதாக பொலிஸில் தெரிவித்திருக்கின்றனர்.

இனாமுல் ஹக், இஸ்மத், நிப்ராஸ் ஆகியோர் விலையுயர்ந்த Phone களும் வாங்கியுள்ளதோடு, இஸ்மத் என்பவனிடம் 50000/= ரூபா பணமும், மிகுதி நகைகளும் இருந்துள்ளது.

செங்கலடியில் மூன்று நகைக்கடைகளிலும், ஏறாவூரில் ஒரு நகைக்கடையிலும் சில நகைகள் விற்கப்பட்டு, அந் நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றம் உத்தரவுக்கமைய தடுப்பு காவலில் வைத்துள்ளார்கள்.